/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் குடியிருப்போர் சங்கம் தீர்மானம்
/
கடலுாரில் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் குடியிருப்போர் சங்கம் தீர்மானம்
கடலுாரில் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் குடியிருப்போர் சங்கம் தீர்மானம்
கடலுாரில் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் குடியிருப்போர் சங்கம் தீர்மானம்
ADDED : நவ 11, 2024 05:37 AM

கடலுார், : கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் வில்வநகரில் நடந்தது.
தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன், ஆலோசகர் ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். இணைப் பொதுச் செயலாளர் தேவநாதன் வரவேற்றார்.
பொதுச் செயலாளர் வெங்கடேசன் பேசினார்.
கடலுாரில் பரவி வரும் டெங்கு மற்றும் விஷக்காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
கொண்டங்கி ஏரியை பாதுகாக்கப்பட்ட நீர்நிலை பகுதியாக அறிவித்து கொள்ளளவை அதிகப்படுத்தி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடலுார் மாநகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.
கடலுார் கெடிலம் மற்றும் பெண்ணையாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் மாநகராட்சி அலுவலகம் முன் டிச., 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.