/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆளுங்கட்சியில் 'மரியாதை' மூத்தவர்கள் 'அப்செட்'
/
ஆளுங்கட்சியில் 'மரியாதை' மூத்தவர்கள் 'அப்செட்'
ADDED : ஜன 31, 2024 02:22 AM
அரசியல் கட்சியினர், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த கிளை செயலர் முதல் நகர, ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை, தங்கள் கட்சியில் இணைத்து பலத்தை கூட்டுவது வழக்கம்.
அதன்படி, நல்லுார் தெற்கு ஒன்றியத்தில் ஆளும் கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, மாற்றுக்கட்சி நிர்வாகிகள் சிலர் தங்களை இணைத்து வருகின்றனர்.
புதிதாக இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள், ஆளும் கட்சியில் தங்களை சீனியர் நிர்வாகி போன்ற தோரணையில வலம் வர துவங்கியுள்ளனர். லோக்சபா தேர்தலில் எங்களுக்கு பொறுப்பு கொடுங்கள் என, கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டு வருகின்றனர். அதன்படி, புதியதாக சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிகிறது. இதையறிந்த ஆளும் கட்சி சீனியர்கள், தங்களின் உழைப்புக்கு பொறுப்பு, பதவிகள் இல்லையென்றாலும், கட்சியில் மரியாதை கிடைத்தால் போதும் என, 'அப்செட்' டில் உள்ளனர்.