/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : நவ 08, 2025 01:51 AM

கடலுார்: கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத் தில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் வில்வராயநத்தம் பகுதியில் கடந்த 1986ம் ஆண்டு, நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்த ஊழியர்கள், 20 பேர் தங்கள் சொந்த பணத்தில் 2 ஏக்கர் இடத்தை வாங்கி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் பெயரில் பதிவு செய்தனர்.
அந்த இடத்தை தங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவெடுக்க அதிகாரிகள் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அழைப்பாணை விடுத்திருந்தனர்.
நேற்று மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு ஓய்வுபெற்ற பணியாளர்கள் வந்தபோது, இணைப்பதிவாளர் பணிநிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.
அதில் அதிருப்தியடைந்த ஓய்வுபெற்ற பணியாளர்கள், பகல் 12:30மணிக்கு அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிதுநேரத்திற்கு பின் அலுவலகம் திரும்பிய இணைப்பதிவாளருடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

