/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று துவக்கம்
/
வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று துவக்கம்
ADDED : டிச 19, 2024 06:54 AM
கடலுார்; கடலுார் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் இன்று துவங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
2024- - 25ம் ஆண்டு, கடலுார் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று (டிச.19ம் தேதி) துவங்குகிறது.
அதன்படி நெய்வேலி ஜி.கே.காலனி ஏ பிளாக் மாற்று குடியிருப்பில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சிலம்பம் போட்டியும், காடாம்புலியூர் குறிஞ்சி மெட்ரிக் பள்ளியில் மாணவிகளுக்கான பீச் வாலிபால் போட்டியும், நாளை 20ம் தேதி மாணவர்களுக்கும் தனித்தனியே நடக்கிறது. டிச.21ம் தேதி கடலுார் காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஜூடோ போட்டி நடக்கிறது.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் காலை 8மணிக்குள் போட்டி நடக்கும் இடங்களில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

