/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக்கில் ரூ.52 ஆயிரம் கோடி வருவாய்தான் தமிழக அரசின் சாதனை மாஜி அமைச்சர் சம்பத் சாடல்

ADDED : அக் 25, 2024 06:50 AM

கடலுார்: அ.தி.மு.க., 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், வடக்கு மாவட்டம் சார்பில், கடலுாரில் நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் மோகன், தொடர்பாளர் கோவை சத்யன் முன்னிலை வகித்தனர். அவைத் தலைவர் சேவல் குமார் வரவேற்றார்.
வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கி, பேசியதாவது;
தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் தகுதி தற்போது இருக்கும் தி.மு.க., தலைமைக்கு இருக்கிறதா என, மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஊழல் வழக்கில் ஒரு அமைச்சர் சிறை செல்கிறார். அவர் ஒரு ஆண்டிற்கு மேலாக சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்ததும் உடனடியாக அமைச்சர் பதவி தந்த கேவலமான அரசு ஸ்டாலின் அரசு. டாஸ்மாக்கில் 52 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருவது தான் இந்த அரசின் சாதனை. ஜெ., படிப்படியாக கடைகள் குறைக்கப்படும் என, கடைகளை குறைத்தார். தி.மு.க., அரசு கடைகளை மூடியதா?
தகுதியற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்சி துாக்கி எறியப்பட வேண்டும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெற எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் மாநகர பகுதி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், வினோத்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி, மீனவர் அணி தங்கமணி, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைசெயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பகுதி செயலாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.