/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
5 ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
/
5 ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
5 ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
5 ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
ADDED : ஆக 23, 2025 05:31 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக என்னென்ன பணிகள் நடந்து வருகிறது. தற்போது, பணிகளின் நிலை, எத்தனை சதவீதம் முடிந்துள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின், அவர் கூறியதாவது:
பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், கீரப்பாளையம் ஒன்றியங்களில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தார் சாலை, மண் சாலை, சாலை பராமரிப்பு பணிகள், விவசாய நிலங்கள் இணைப்புச் சாலை போன்ற 25 பணிகள் 1038 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நபார்டு திட்டத்தின் கீழ், தார் சாலை, மண் சாலை, கிராம இணைப்பு சாலைகள் போன்ற 15 பணிகள் 1387 லட்சம் ரூபாய் மதிப்பில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தில் புதிய சுகாதார நிலையம், பொது சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் போன்ற 7 சுகாதார அலுவலகங்கள் 494.93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு இடங்களில் நடைபெறும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட வன அலுவலர் குருசாமி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வரதராஜ பெருமாள், பி.டி.ஓ.,க்கள் சதீஷ்குமார், அமுதா, பார்த்திபன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முத்துபெருமாள், கலையரசன், டாக்டர் மனோகர், துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர் உடனிருந்தனர்.