ADDED : டிச 06, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மருங்கூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட, 500 ஏக்கர் நெற்பயிர்நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது.
இதையொட்டி, விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூரில் சாகுபடி செய்யப்படுள்ள, 500 ஏக்கர் பரப்பிலான சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.
இதனால், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.

