/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடர் மழையால் நெற்பயிர்கள் செழிப்பு
/
தொடர் மழையால் நெற்பயிர்கள் செழிப்பு
ADDED : நவ 04, 2025 01:26 AM

நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் கிடைப்பதால் விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் போ ன்ற பயிர்களை அதிகளவு பயிர் செய்து வந்தனர். கரும்பு பயிரிட அதிக செலவாகிறது. சரியான விலை கிடைக்காததாலும், வெட்டு கூலி அதிகமானதால், கரும்பு பயிர் செய்ய விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. நெல்லுக்கு மத்திய மாநில அரசுகள் கூடுதல் விலையுடன், ஊக்க தொகையும் வழங்குகின்றனர்.
இதனால் விவசாயிகள் நெல் பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுக்கு மூன்று போகம் பயிர் செய்வதால் நெல்லில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. தற்போது சம்பா பட்டத்தில் நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் செய்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் நெல் செழித்து வளர்ந்து பச்சை பசேலென ரம்யமாக காட்சி அளிக்கிறது.

