/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காராமணிக்குப்பம் சந்தையில் சாலையோர கடைகளால் விபத்து அபாயம்
/
காராமணிக்குப்பம் சந்தையில் சாலையோர கடைகளால் விபத்து அபாயம்
காராமணிக்குப்பம் சந்தையில் சாலையோர கடைகளால் விபத்து அபாயம்
காராமணிக்குப்பம் சந்தையில் சாலையோர கடைகளால் விபத்து அபாயம்
ADDED : நவ 04, 2025 01:27 AM

நெல்லிக்குப்பம்:  காராமணிக்குப்பம் சந்தையில் சாலையோர கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இங்கு ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளும், கருவாடும் விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.
அதேபோல் 500 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்கின்றனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் சந்தைக்கு போதுமான இடவசதி உள்ளதால் சாலையோரம் கடை அமைக்க கூடாது என்பதால் வேலி அமைத்துள்ளனர்.
ஆனால் 50 க்கும் மேற்பட்ட கடைகள் கடலுார் பண்ருட்டி சாலையோரம் கடை அமைத்தும், சிலர் வாகனங்களில் காய்கறி வைத்து வியாபாரம் செய்கின்றனர். சாலையிலேயே மக்கள் நின்று பொருட்கள் வாங்குவதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்தி வைக்கின்றனர்.
சாலையோரம் வரிசையாக கடை  அமைப்பவர்கள், ஆட்டோக்களை சாலையில் நிறுத்துவதை சந்தையை ஏலம் எடுத்த நபரும், பாதுகாப்புக்கு செல்லும் போலீஸாரும் கண்டுகொள்வதில்லை.
இதனால் பெரும் விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையோரம் கடை அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

