/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 04, 2025 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:  சான்றோர்பாளையம் பச்சை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கட லுார் முதுநகர், சான்றோர்பாளையம் பச்சை வாழியம்மன் சமேத மன்னாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மண்டலாபிஷேக பூஜைகள் இன்று 4ம் தேதி துவங்குகிறது.

