/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்ணீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்
/
தண்ணீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்
ADDED : டிச 08, 2024 05:17 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் தேங்கியிருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் பெண்ணையாற்றின் வெள்ளநீர் புகுந்ததால் 18 வார்டுகளில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கியது. 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை தண்ணீர் வடியவில்லை.
விஜயலட்சுமி நகர், சுகம் நகர், நிலா நகர், திடீர்குப்பம் உட்பட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.