/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்வாய் அடைப்பு நோய் பரவும் அபாயம்
/
கால்வாய் அடைப்பு நோய் பரவும் அபாயம்
ADDED : ஆக 24, 2025 10:20 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யாததால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி முழுவதும் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இவற்றை சுத்தம் செய்ய போதுமான அளவில் நிரந்தர பணியாளர்கள் இல்லை. ஒப்பந்த பணியாளர்கள் சிலர் இந்த துாய்மை பணியை செய்தாலும் கூடுதல் ஆட்கள் இல்லாததால் துாய்மை பணியில் தொய்வு ஏற்படுகிறது.
பொதுமக்கள் சிலர் குப்பையை தெருவில் கொட்டுவதால் பாலிதீன் கவர்கள் கால்வாயில் விழுந்து அடைத்து கொள்கிறது. இதனால் முறையாக கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடக்காததால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாயை துாரவார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.