ADDED : டிச 09, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி,: திட்டக்குடியில் டிப்பர் லாரி மோதி சைக்கிளில் சென்ற இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
திட்டக்குடி, மணல்மேட்டை சேர்ந்தவர் சங்கர் மகள் கோமதி, 18; நேற்று பகல் 11:30 மணியளவில் திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த டி.என். 28 - ஏ.எல். 4145 பதிவெண் கொண்ட டிப்பர் லாரி மோதியதில் கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திட்டக்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோமதியின் அக்கா காயத்ரி கொடுத்த புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.