/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் வழங்காதை கண்டித்து புவனகிரியில் சாலை மறியல்
/
குடிநீர் வழங்காதை கண்டித்து புவனகிரியில் சாலை மறியல்
குடிநீர் வழங்காதை கண்டித்து புவனகிரியில் சாலை மறியல்
குடிநீர் வழங்காதை கண்டித்து புவனகிரியில் சாலை மறியல்
ADDED : மே 22, 2025 11:30 PM
புவனகிரி: புவனகிரி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புவனகிரி அருகே ஆயிபுரம் ஊராட்சியை சேர்ந்த தம்பிக்குநல்லான்பட்டினம் கிராம ஆற்றங்கரை தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் 3:00 மணிக்கு தம்பிக்குநல்லான்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, புவனகிரியில் ஜமாபந்தியை முடித்து விட்டு காரில் கடலுார் நோக்கி சென்ற டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை 3:10 மணிக்கு கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக சிதம்பரம் - கடலுார் சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.