/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் சாலை மறியல் 2 மணி நேரம் 'டிராபிக் ஜாம்'
/
பண்ருட்டியில் சாலை மறியல் 2 மணி நேரம் 'டிராபிக் ஜாம்'
பண்ருட்டியில் சாலை மறியல் 2 மணி நேரம் 'டிராபிக் ஜாம்'
பண்ருட்டியில் சாலை மறியல் 2 மணி நேரம் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஆக 14, 2025 12:51 AM

பண்ருட்டி : பண்ருட்டியில் வீட்டிற்கான மின் கம்பிகளை அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி, களத்துமேடு ஏரிகரையில் இருந்த 178 வீடுகளை நீதிமன்ற உத்தரவின்படி கடந்தாண்டு வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர். இவர்களுக்கு மாற்று இடம் வழங்காததால் பலர் அதே இடத்தில் மீண்டும் வீடு கட்டி வசிக்கின்றனர்.
இவர், தங்கள் வீடுகளுக்கு மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடி பயன்படுத்தியதாக கூறி மின்வாரிய அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக மின்கம்பிகளை அகற்றினர்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்றிரவு 6:30 மணிக்கு ஏரி அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த தாசில்தார் பிரகாஷ் மற்றும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்தது, 8:30 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பண்ருட்டி-மடப்பட்டு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

