/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
த.வெ.க., கொடிக்கம்பம் அகற்றம் ராமநத்தம் அருகே சாலை மறியல்
/
த.வெ.க., கொடிக்கம்பம் அகற்றம் ராமநத்தம் அருகே சாலை மறியல்
த.வெ.க., கொடிக்கம்பம் அகற்றம் ராமநத்தம் அருகே சாலை மறியல்
த.வெ.க., கொடிக்கம்பம் அகற்றம் ராமநத்தம் அருகே சாலை மறியல்
ADDED : நவ 02, 2024 06:17 AM

ராமநத்தம்: ராமநத்தம் அருகே த.வெ.க., கொடிக் கம்பத்தை அகற்றிய போலீசாரிடம், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமம், எம்.ஜி.ஆர்., நகரில், சில நாட்களுக்கு முன் த.வெ.க., கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில், அனுமதியின்றி நடப்பட்டுள்ள கொடிக் கம்பத்தை அகற்ற திட்டக்குடி தாசில்தார் ஆரோக்கியராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் மற்றும் போலீசார், நேற்று மாலை 4:30 மணியளவில் கொரக்கவாடி, எம்.ஜி.ஆர்., நகரில் இருந்த த.வெ.க., கொடிக் கம்பத்தை அகற்றினர்.
அதனை அறிந்த அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் நீலகண்டன், நிர்வாகி முத்துவேல் மற்றும் பொதுமக்கள் போலீசை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் அதே இடத்தில் மரக்கம்பம் நட்டு கொடியை ஏற்றினர்.
தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசாரிடம், த.வெ.க., நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாலை 4:50 மணியளவில் ராமநத்தம் - ஆத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், வி.சி.க.,வினர் அந்த பகுதியில் திடீரென கொடிக் கம்பத்தை நட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்க வந்த டி.எஸ்.பி., மோகன், துணை தாசில்தார் ராமர் ஆகியோர், அனுமதி பெற்ற பின் கொடிக்கம்பத்தை வைக்குமாறு கூறினர். அதனையேற்று த.வெ.க.,வினர் மாலை 6:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
இருப்பினும், த.வெ.க., மற்றும் வி.சி.க., கொடிகள் நடப்பட்ட பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.