/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை அமைக்கும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை அமைக்கும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 11, 2025 07:14 AM

நெய்வேலி; நெய்வேலி தொகுதியில் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நெய்வேலி தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கிளை நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையாட்டி அங்கு நடந்த விழாவில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொள்ளுகாரன்குட்டை முதல் சிறுதொண்டமாதேவி வரை 95 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கொள்ளுகாரன்குட்டை முதல் வேகாக்கொள்ளை வரை 97.42 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பி.டி.ஓ., க்கள் மீனாகுமாரி, பாபு, இன்ஜினியர் சங்கர், நுாலக பராமரிப்பாளர் வெங்கடாஜலபதி, தெற்கு ஒன்றிய அவை தலைவர் ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் குணசேகரன், வழக்கறிஞர் ஹரிதாஸ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாண்டுரங்கன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானபிரகாசம், துணை தலைவர் தட்சணாமூர்த்தி பங்கேற்றனர்.