/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் திட்ட பணிக்கு சாலை சேதம் ஒன்றிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

ADDED : டிச 06, 2024 07:12 AM

விருத்தாசலம் : கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்காக, சாலையை உடைப்பதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குப்பநத்தம் வழியாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலை பழுதடைந்ததால், சமீபத்தில் ரூ.1.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சாலையை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் வடிகால் வாரியம் உடைக்கும் தகவலை அறிந்த பி.டி.ஓ., மோகனாம்பாள், பொறியாளர் கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று, குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது, பணி குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. ரூ. 1.50 கோடயில் சீரமைத்து சில மாதங்களுக்குள் அதனை பெயர்த்தெடுத்து, குடிநீர் குழாய் அமைப்பது தவறு என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.