/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை விரிவாக்கம் சப் கலெக்டர் ஆய்வு
/
சாலை விரிவாக்கம் சப் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 24, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரியில் சாலை விரிவாக்கத்திற்காக இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவது குறித்து சப் கலெக்டர் ஆய்வு செய்தார் .
விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில், கீழ்புவனகிரியில் இருந்து பி.முட்லுார் தீத்தாம்பாளையம் வரை 7 மீட்டர் அகலத்தில் இருந்து 10 மீட்டர் அகலத்தில் சாலை விரி வாக்கம் செய்ய அளவீடு பணி நடந்தது. இதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது. சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவது குறித்து சப் கலெக்டர் கிஷன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
தாசில்தார் அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி உடனிருந்தனர்.