ADDED : டிச 20, 2025 06:44 AM

புவனகிரி: புவனகிரியில் சாலை விரிவாக்கப் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ. 23.50 கோடி மதிப்பில் அமைச்சர் துவக்கி வைத்தார்.
கீழ்புவனகிரியிலிருந்து பரங்கிப்பேட்டை வரை சாலை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு ரூ.23.50 கோடி ஒதுக்கீடு செய்தது.
குறிஞ்சிப்பாடி உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள கீழ்புவனகிரியிலிருந்து பி.முட்லுார் வரை, 12 கி.மீ., தொலைவிற்கு, 10 மீ., அகலத்தில் சாலை விரிவாக்கம் செய்ய அளவீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் சாலை அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
பரங்கிப்பேட்டை பிரிவு அலுவலக உதவி பொறியாளர் ஜெகன் வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூமி பூஜையை துவக்கி வைத்து, விரைந்து, தரமாக சாலை பணியை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், முத்துபெருமாள், மதியழகன், புவனகிரி நகர தி.மு.க., பொறுப்பாளர் ஜெயகணேஷ், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்து, ராமன் செல்லப்பாண்டியன், தம்பாபிரகாஷ், ராமன், கமால்பாஷா, நெடுமாறன், அமுதாராணி, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உதவி பொறியாளர் வினோத் நன்றி கூறினார்.

