/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பள்ளங்களால் விபத்து அபாயம்
/
சாலை பள்ளங்களால் விபத்து அபாயம்
ADDED : டிச 01, 2025 05:08 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் சாலைகளில் மெகா பள்ளங்களால் விபத்து அபாயம் தொடர்கதையாகி வருகிறது.
தொடர் மழை காரணமாக சிதம்பரம் நுழைவு வாயிலில், வடக்கு மெயின்ரோட்டில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு, வாகன ஓட்டிகள் விழாமல் இருக்க 'கல்' வைக்கப்பட்டுள்ளது.
அதே போல், சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்லும் சாலையில், காந்தி சிலை வளைவில், மெகா 'சைஸ்' பள்ளங்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதனால், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

