/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அறுவை சிகிச்சை செய்தவர் சாவு; தனியார் மருத்துவமனை முன் சாலை மறியல்
/
அறுவை சிகிச்சை செய்தவர் சாவு; தனியார் மருத்துவமனை முன் சாலை மறியல்
அறுவை சிகிச்சை செய்தவர் சாவு; தனியார் மருத்துவமனை முன் சாலை மறியல்
அறுவை சிகிச்சை செய்தவர் சாவு; தனியார் மருத்துவமனை முன் சாலை மறியல்
ADDED : டிச 01, 2025 05:07 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தவர் இறந்ததை கண்டித்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கந்தசாமி, 50; இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டதால், விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை நடந்தது.
இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதில், ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று பகல் 3:00 மணியளவில் தனியார் மருத்துவமனை முன், டாக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், பிரேத பரிசோதனை செய்து, இறப்புகான காரணம் குறித்து தெரிந்ததும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன்பேரில், அனைவரும் பகல் 3:15 மணியளவில் கலைந்து சென்றனர்.