/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேரோடு சாய்ந்த புளிய மரம் சிறுமி உட்பட 3 பேர் காயம்
/
வேரோடு சாய்ந்த புளிய மரம் சிறுமி உட்பட 3 பேர் காயம்
வேரோடு சாய்ந்த புளிய மரம் சிறுமி உட்பட 3 பேர் காயம்
வேரோடு சாய்ந்த புளிய மரம் சிறுமி உட்பட 3 பேர் காயம்
ADDED : டிச 01, 2025 05:06 AM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே சாலையின் குறுக்கே வேரோடு புளியமரம் சாய்ந்ததில், அவ்வழியே பைக்கில் சென்ற சிறுமி உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த நாவலுாரை சேர்ந்தவர் சரண்குமார், 28, இவர் தனது பைக்கில் உறவினர் முத்து, 21; தனது சகோதரி மகள் சாய், 4; ஆகியோரை ஏற்றி கொண்டு, தொழுதுாரில் உள்ள உறவினரை பார்க்க சென்றார்.
திட்டக்குடி - தொழுதுார் சாலையில், நேற்று காலை 9:00 மணியளவில் கீழ்ச்செருவாய் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர புளியமரம் காற்றில் வேரோடு சாய்ந்தது. இதில், சரண்குமார், முத்து, சிறுமி சாய் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
திட்டக்குடி போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பொக்லைன் உதவியுடன் 9:30 மணியளவில் புளியமரத்தை அகற்றினர்.
இதனால் திட்டக்குடி - தொழுதுார் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

