ADDED : டிச 10, 2025 08:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறுராஜன் வாய்க்கால் பிளவு பட்ட சாலை சீரமைக்கும் பணி, தினமலர் செய்தி எதிரொலியாக, துவங்கி உள்ளது.
சென்னை - கும்பகோணம் சேத்தியாத்தோப்பு வெள்ளாறுராஜன் வாய்க்கால்கரை சாலை கடந்த 15 நாட்களுக்கு முன்பு உள்வாங்கி பிளவு ஏற்பட்டது. பிளவு ஏற்பட்ட இடத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் சேத்தியாத்தோப்பு போலீசார் பேரிகார்டு வைத்து எச்சரிக்கை செய்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
செய்தியின் எதிரொலி காரணமாக நெடுஞ்சாலைத்துறையினர் பிளவு ஏற்பட்ட இடத்தில் ஜல்லி துகள்களை கொட்டி அழுத்தி சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

