/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 01, 2025 02:17 AM

பண்ருட்டி : பண்ருட்டி போக்குவரத்து காவல் துறை சார்பில் ஜான்டூயி நர்சரி பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளித் தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். தாளாளர் வாலண்டினா லெஸ்லி, இணை செயலாளர் நித்தின் ஜோஸ்வா, சப் இன்ஸ்பெக்டர் முரளி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் தலைலமை தாங்கி பேசுகையில், 'மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அப்படி செய்தால் தான் சாலை விபத்துகளை தடுக்க முடியும். பெற்றோர்களும் சாலை விதிமுறைகளை கடைபிடித்து பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்' என்றார். சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.