/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 20, 2024 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பெண்ணாடம் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து ஊழியர்கள், வாகன ஓட்டிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர், போக்குவரத்து பாதுகாப்பு, ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.