ADDED : பிப் 27, 2024 10:22 PM
பெண்ணாடம்,: பெண்ணாடம் அடுத்த ஆலத்தியூர் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.
விழாவிற்கு, ஆலையின் மூத்த உப தலைவர் (உற்பத்தி) மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். உதவி உப தலைவர் லட்சுமணன், பொது மேலாளர் ஞானமுருகன் முன்னிலை வகித்தனர். துணை பொது மேலாளர் சுரேஷ் வரவேற்றார். பாதுகாப்பு அதிகாரி, ஆலை அதிகாரிகள், தொழிலாளர்கள், டிரைவர்கள், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், அரியலுார் மாவட்டம், தளவாய் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சாலை மற்றும் சுரங்க பகுதியில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நிகழ்ச்சியில், சிறந்த டிரைவர்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. மக்கள் தொடர்பு அதிகாரி கண்ணன் நன்றி கூறினார்.

