/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.10 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.10 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.10 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.10 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 25, 2024 06:45 AM

விருத்தாசலம்,: நடியப்பட்டு ஊராட்சியில் 10 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கம்மாபுரம் ஒன்றியம், நடியப்பட்டு ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 10 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை அமைத்திட நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, சிமென்ட் சாலை பணியை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பி.டி.ஓ.,க்கள் குமரன், சங்கர், ஊராட்சித் தலைவர் பாலமுருகன், காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், நகர தலைவர் ரஞ்சித்குமார், நிர்வாகிகள் சிராஜிதீன், ஆனந்த், ரகுபதி, பாலசுப்ரணியன் உடனிருந்தனர்.