/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.ஆதனுார் பகுதியில் சாலை பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
/
பு.ஆதனுார் பகுதியில் சாலை பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பு.ஆதனுார் பகுதியில் சாலை பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பு.ஆதனுார் பகுதியில் சாலை பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : ஏப் 11, 2025 05:55 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பு.ஆதனுார் காலனிக்கு செல்லும் தார்சாலை பணியை தனிநபர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பு.ஆதனுார் காலனி மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் மயான பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் கொட்டி வரும் நிலையில் இந்த பாதை அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் செல்வராசுநேற்று முன்தினம், மயான பாதை தனது பட்டா நிலத்தில் செல்வதால் சாலை போடக்கூடாது என பணியை தடுத்து நிறுத்தினார்.
ஆனால், அப்பகுதி மக்கள் சாலை போட வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் சேதுபதி, புவனகிரி பி.டி.ஓ., சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் தரப்பில் 3 தலைமுறைக்கு மேலாக இந்த பாதை மயானத்திற்கு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் சடலங்களை எடுத்துச் செல்கிறோம். மழைக் காலங்களில் சேறும், சகதியுமாவதால் சடலங்களை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆவணங்களை பார்வையிட்ட பி.டி.ஓ., 60 ஆண்டுகளுக்கும் மேலாக மயான பாதையாக பயன்படுத்தி சடலங்களை எடுத்து செல்கின்றனர். இதனை தடுப்பது சட்டபடி குற்றமாகும் என எச்சரித்ததை தொடர்ந்து, 2:00 மணியளவில் சாலை போடும் பணியை தொடர்ந்தனர்.

