/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெங்கைகொண்டானில் சாலை பணி தீவிரம்
/
கெங்கைகொண்டானில் சாலை பணி தீவிரம்
ADDED : பிப் 18, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கும் பணியை, சேர்மன் ஆய்வு செய்தார்.
கெங்கைகொண்டான் பேரூராட்சி எஸ்.பி.டி.எஸ்., நகர் 14 வது வார்டில் நகர்புறச் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் ஆய்வு செய்தார். துணை சேர்மன் பெலிக்ஸ், வார்டு கவுன்சிலர் மாலா சதீஷ்குமார், வார்டு செயலாளர் வீரராகவன், வர்த்தக அணி அமைப்பாளர் சுரேஷ், இளைஞர் அணி ராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மார்க், உட்பட பலர் பங்கேற்றனர்.