/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரிடம் வழிப்பறி: 2 பேருக்கு வலை
/
வாலிபரிடம் வழிப்பறி: 2 பேருக்கு வலை
ADDED : ஜன 29, 2025 06:55 AM
புவனகிரி : புவனகிரியில் வாலிபரை தாக்கி மொபைல் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மேல் புவனகிரி ஆட்டுத்தொட்டித்தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீபன்சன், நேற்று முன் தினம் இரவு 9,00 மணிக்கு, புவனகிரியில் உள்ள ஒரு மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொண்டு, ஆட்டுத்தொட்டி தெருவில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்போது அங்காளம்மன் நகரில் சிறு நீர் கழித்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த மேல்புவனகிரி திரவுபதியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யா, ராமதாஸ் மகன் தினேஷ் இருவரும் குடி போதையில் பின் தொடர்ந்து சென்று ஸ்ரீபன்சனை தாக்கி,மொபைல் போன் மற்றும் 8ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர்.
ஸ்ரீபன்சனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, படுகாயமடைந்த அவரை புவனகிரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.