ADDED : ஆக 31, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி, செப், 1–
திட்டக்குடி அருகே மர்மமான முறையில் கூரைவீடு தீப்பிடித்து எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரித்தனர்.
திட்டக்குடி அடுத்த எழுமாத்துாரைச் சேர்ந்தவர் ரத்தினம் மனைவி கொளஞ்சி, 65. கூலித்தொழிலாளி. கணவர் இறந்து விட்டார். நேற்று மாலை 3:00 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மமான முறையில் வீடு தீப்பிடித்து எரிந்தது.
இதையறிந்த அருகிலுள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதில், வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து திட்டக்குடி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரித்தனர்.
