ADDED : மே 12, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: மர்மமான முறையில் கூரை வீடு எரிந்து சேதமானது.
மங்கலம்பேட்டை அடுத்த சிவனார்குப்பம் இளையபெருமாள். இவரது கூரை வீடு நேற்று முன்தினம் மதியம் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் சென்று, கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது. மங்கலம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.