ADDED : ஜூலை 01, 2026 12:26 AM
நடுவீரப்பட்டு: கூரை வீடு மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்ததில் நகை மற்றும் பொருட்கள் சேதமடைந்தன.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு மேட்டுதெருவை சேர்ந்தவர் பாலசந்தர்,38; இவர் வீட்டில் தனது தாய் அஞ்சலையுடன் இரவு துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது இவரது கூரை வீடு மர்மமான முறையில் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீட்டில் இருந்த பணம், டிவி, பீரோ, கட்டில், 4 சவரன் நகை தீயில் கருகி சேதமடைந்தன. நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில்வீடு எரிந்து சாம்பல்
காட்டுமன்னார்கோவில்: நள்ளிரவில் முதியவர் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒரு லட்சம் ரூபாய் பொருட்கள் சேதமாகின.
காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பை சேர்ந்தவர் பரமசிவம் 70; இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டு வாசலில் படுத்திருந்தார். நள்ளிரவு 12:00 மணிக்கு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவியதில் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
