/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அழுகும் நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
/
அழுகும் நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
ADDED : டிச 08, 2024 05:27 AM

சேத்தியாத்தோப்பு : பின்னலுார் சூடாமணி ஏரி மேல்பகுதியில் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து வடியாமல் நெற்பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் சூடாமணி ஏரியில் மேல் பகுதியில் 100 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நெல் நடவு செய்திருந்தனர்.
கடந்த வாரம் பெஞ்சல் புயல் மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் முழுதும் மூழ்கின.சூடாமணி ஏரியிலிருந்து வடியும் வாய்க்கால்கள் அனைத்தும் முறையாக துார்வாரப்படாததால் ஏரியிலிருந்து தண்ணீர் வடிந்து செல்லாமல் மேல்பகுதியில் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து தேங்கியுள்ளது.
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெல் பயிரிட்டு வரும் விவசாயிகள் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகுவதைப் பார்த்து கவலை அடைந்துள்ளனர்.சூடாமணி ஏரியின் வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் துார்வாரி தண்ணீர் வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.