ADDED : அக் 20, 2024 06:42 AM

கடலுார்: கடலுாரில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் துாக்கணாம்பாக்கம் போலீசார், கடந்த செப்., 30ம் தேதி இரண்டாயிரம் விளாகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, நின்றிருந்த அதே ஊரை சேர்ந்த அங்காளன்,44, என்பவரிடம் போலீசார் விசாரித்தபோது, போலீசாரை ஆபாசமாக திட்டி, கத்தியைக்காட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்காளனை கைது செய்தனர்.இவர் மீது துாக்கணாம்பாக்கம் போலீசில் ரவுடி பதிவேடு பராமரிக்கப்படுகிறது. மேலும் இவர் மீது மணல்திருட்டு,கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளது. இவரின் தொடர்குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ராஜாராம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை
செய்தார், கலெக்டர் உத்தரவின்படி, மத்திய சிறையில் உள்ள அங்காளனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.