/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு
/
லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு
ADDED : செப் 05, 2025 03:21 AM
நெய்வேலி:லாரி டிரைவரை மிரட்டி செல்போன், பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த புல்லையா மகன் திம்னய்யா 26; இவர் ஆந்திராவில் இருந்து நெய்வேலி என்.எல்.சி,யில் புதிய அனல் மின் நிலையத்திற்கு தாது பொருட்களை நள்ளிரவு நேரத்தில் ஏற்றி வந்துள்ளார்.
என்.எல்.சி., பி.சி.ஸ்டோர் அருகே லாரியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர், லாரி டிரைவரை மிரட்டி செல்போன், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து திம்னய்யா அளித்த புகாரின் பேரில், நெய்வேலி ெதர்மல் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.