/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2.80 லட்சம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2.80 லட்சம் திருட்டு
ADDED : மார் 20, 2025 05:06 AM
கடலுார் : வீட்டின் பூட்டை உடைத்து, 2 லட்சத்து 80 ஆயிரம் பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் அடுத்த பெரியகாட்டுப்பாளையம், அனுகிரகா குடியிருப்பை சேர்ந்தவர் தயாநிதி,87; இவர், கடந்த 5ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
கடந்த 10ம் தேதி குடும்பத்தினர் அனைவரும் தயாநிதியை பார்க்க மருத்துவமனை சென்றனர். மறுநாள் 11ம் தேதி, தயாநிதியின் மகள் வண்டார்குழலி, வீட்டிற்கு வந்துபார்த்தபோது, முன் கதவின் பூட்டு மற்றும் உள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடுபோனது தெரிந்தது.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.