/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆம்னி பஸ்சில் ரூ.40 லட்சம் சிக்கியது
/
ஆம்னி பஸ்சில் ரூ.40 லட்சம் சிக்கியது
ADDED : ஏப் 25, 2025 01:33 AM

கடலுார்:உரிய ஆவணம் இன்றி ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட, 40 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலுார், ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் நேற்று அதிகாலை, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த ஆம்னி பஸ்சை சோதனை செய்தனர்.
பஸ்சில், சந்தேகத்திற்கிடமாக வாலிபர் வைத்திருந்த பையில், இரண்டு பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், சென்னை, எல்லீஸ் சாலையை சேர்ந்த நபீர் அன்வர், 20, என்பதும், சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு எந்த ஆவணமும் இன்றி, 40 லட்சம் ரூபாய் கொண்டு செல்வதும் தெரிந்தது.
கடலுார் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.