/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலிடெக்னிக் மாணவருக்கு ரூ.47 லட்சம் விபத்து இழப்பீடு
/
பாலிடெக்னிக் மாணவருக்கு ரூ.47 லட்சம் விபத்து இழப்பீடு
பாலிடெக்னிக் மாணவருக்கு ரூ.47 லட்சம் விபத்து இழப்பீடு
பாலிடெக்னிக் மாணவருக்கு ரூ.47 லட்சம் விபத்து இழப்பீடு
ADDED : மார் 10, 2024 07:37 AM

கடலுார் : சாலை விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரி மாணவருக்கு 47 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவிட்டது.
வடலுாரைச் சேர்ந்தவர் சஞ்ச, 17; பாலிடெக்னிக் கல்லுாரி மாணவரான இவர், கடந்தாண்டு பிப்., 4ம் தேதி, பைக் ஓட்டிச் சென்றார். அப்போது, லோடு கேரியர் வாகனம் மோதியதில், கால் துண்டிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து, பாதிப்புக்கு இழப்பீடு பெற்றுத் தரக் கோரி, மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலமாக சஞ்சு, கடலுார் 2வது சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்தார்.
கடலுார் கோர்ட்டில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் சஞ்சுக்கு இழப்பீடு தொகையாக 47 லட்சம் ரூபாய் வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, முதலாவது சிறப்பு மாவட்ட நீதிபதி ஆனந்தன், முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி வேதியப்பன் ஆகியோர் உத்தரவிட்டு, அதற்கான உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

