/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 5 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்
/
ரூ. 5 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்
ADDED : செப் 06, 2025 03:28 AM
கடலுார்: கடலுாரில் வீடு புகுந்து நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், கோண்டூர் அருணாசலம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காமாட்சி,30; இருவரும் தமது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு திருக்கடையூர் சென்றனர். விழா முடிந்து நேற்று மதியம் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 9 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. நகைகள் மதிப்பு 5 லட்சம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து காமாட்சி அளித்த புகாரின்பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.