/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 5 லட்சம் நகை திருட்டு: கடலுார் அருகே துணிகரம்
/
ரூ. 5 லட்சம் நகை திருட்டு: கடலுார் அருகே துணிகரம்
ரூ. 5 லட்சம் நகை திருட்டு: கடலுார் அருகே துணிகரம்
ரூ. 5 லட்சம் நகை திருட்டு: கடலுார் அருகே துணிகரம்
ADDED : நவ 22, 2025 07:34 AM
கடலுார்: கடலுார் அருகே வீடு புகுந்து 5 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கம், மேலக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் தீபக்,28; இவர், நேற்று மதியம் வீட்டை பூட்டாமல் தாழ்ப்பாள் போட்டு வெளியில் சென்றார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்த போது, கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் பீரோவை திறந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சவரன் நகைகளை திருடிச் சென்றது தெரிந்தது.
புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.