/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சான்றிதழ் முறைகேடு: புவனகிரி இன்ஸ்., 'சஸ்பெண்ட்'
/
சான்றிதழ் முறைகேடு: புவனகிரி இன்ஸ்., 'சஸ்பெண்ட்'
சான்றிதழ் முறைகேடு: புவனகிரி இன்ஸ்., 'சஸ்பெண்ட்'
சான்றிதழ் முறைகேடு: புவனகிரி இன்ஸ்., 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 22, 2025 07:34 AM
கடலுார்: புவனகிரி இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டம், புவனகிரி இன்ஸ்பெக்டர் லட்சுமி. இவர், கடலுார் மற்றும் வெளி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலம் சம்பந்தமான ஆவணங்கள் தொலைந்து போனதாக வந்த புகார்கள் அடிப்படையில் முறைகேடாக சி.எஸ்.ஆர்., பதிவு செய்து தடையின்மை சான்றிதழ் வழங்கியதாக மாவட்ட காவல் துறைக்கு புகார் வந்தது.
அதன்பேரில், எஸ்.பி., ஜெயக்குமார், துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், முறைகேடாக தடையின்மை சான்றிதழ் வழங்கியது தெரிந்தது. இதையடுத்து எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரைப்படி, இன்ஸ்பெக்டர் லட்சுமியை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா நேற்று உத்தரவிட்டார்.