/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 6 லட்சம் பூஜை பொருட்கள் உழவர் சந்தையில் விற்பனை
/
ரூ. 6 லட்சம் பூஜை பொருட்கள் உழவர் சந்தையில் விற்பனை
ரூ. 6 லட்சம் பூஜை பொருட்கள் உழவர் சந்தையில் விற்பனை
ரூ. 6 லட்சம் பூஜை பொருட்கள் உழவர் சந்தையில் விற்பனை
ADDED : அக் 03, 2025 01:49 AM

விருத்தாசலம்: ஆயுதபூஜையொட்டி, விருத்தாசலம் உழவர் சந்தையில் தேங்காய், வாழைக்கன்றுகள் என 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
விருத்தாசலம் உழவர் சந்தையில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி தேங்காய், வாழைப்பழம், வாழைக்கன்று, பூசணி உட்பட பல்வேறு விளைபொருட்கள் வழக்கத்தை விட அதிகளவில் விற்பனைக்காக குவிக்கப்பட்டன.
பொது மக்கள் ஆர்வமுடன் பொருட்களை வாங்கிச் சென்றதால், நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
தொடர்ந்து, அலுவலகத்தில் நடந்த ஆயுதபூஜையில் விவசாயிகளின் கத்தி, எடைக்கல், தராசு ஆகியவற்றை வைத்து படையலிட்டு, பொரி, சுண்டல் வழங்கப்பட்டது.
கவுன்சிலர் கருணாநிதி, விவசாயிகளுக்கு நினைவுப் பரிசுவழங்கினார். வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி அலுவலர்கள் சிவக்குமார், தனசேகரன் உடனிருந்தனர்.