/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்று கரையை பலப்படுத்த ரூ.130 கோடியில்... திட்டம்டூ கடலூரில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
/
பெண்ணையாற்று கரையை பலப்படுத்த ரூ.130 கோடியில்... திட்டம்டூ கடலூரில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
பெண்ணையாற்று கரையை பலப்படுத்த ரூ.130 கோடியில்... திட்டம்டூ கடலூரில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
பெண்ணையாற்று கரையை பலப்படுத்த ரூ.130 கோடியில்... திட்டம்டூ கடலூரில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
ADDED : ஜன 30, 2024 05:50 AM
கர்நாடகா மாநிலத்தில் இருந்து பெண்ணையாறு உருவாகி பல சிறு சிறு அணைகளை கடந்து சாத்தனுாருக்குவருகிறது.
அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் திருக்கோவிலுார், விழுப்புரம், சொர்ணாவூர் அணைகட்டு வழியாக கடலுார் அருகே சுபா உப்பலவாடி என்ற இடத்தில் வங்கக்கடலில்கலக்கிறது.
கடலுார் மாவட்டம் வடிகாலாக உள்ள நிலையில், மழை வெள்ள காலங்களில் கெடிலம் மற்றும் பெண்ணையாறு கரைகள் உடைந்து, கடலுார் பகுதிகளில் அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பைஏற்படுத்தி வருகின்றன. அதனால் பெண்ணையாற்று கரையை பலப்படுத்துவதற்காக 5.75 கோடி ரூபாய் மதிப்பில் கரை அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. முதற்கட்டமாக பெண்ணையாறு பாலத்தில் இருந்து நாணமேடு கிராமம் வீரன் கோவில் வரை கரை அமைக்கப்பட்டுள்ளது.
பெண்ணையாற்றின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கரையில் பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, சரஸ்வதி நகர், நாணமேடு,உள்ளிட்ட பல கிராம எல்லைகளை கடந்து செல்கிறது.
இந்த கரை உப்பனாற்றை கடந்து சென்றால்தான் முகத்துவாரத்தை அடைய முடியும். ஆனால் இப்பணி நாணமேடு கிராமத்தோடு நிறுத்தப்பட உள்ளது.
அதனால் வெள்ளநீர் உப்பனாற்றின் வழியாக மீண்டும் கிராமங்களுக்கு புகும் அபாயம் உள்ளது.
இதனால், பல கோடி செலவு செய்து கரை அமைத்தும் அது முழுமையாக பயன்படவில்லையே என கிராம மக்களின் ஆதங்கமாக உள்ளது. இந்நிலையில் இப்பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், பெண்ணையாற்றுக்குள் இருக்கும் மிகப்பெரிய மண் மேட்டில் கருவேல முள்மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
இதனால் இப்பகுதியில் தண்ணீர் ஓட்டம் இல்லாமல் வடக்கு, தெற்கு கரைப்பகுதியில் வேகமாக தண்ணீர் ஓடுகிறது.இதன்காரணமாக இரு கரையோர பகுதியில் உள்ள சாகுபடி செய்துள்ள நிலங்கள் மீண்டும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இந்நிலையில் தென் பகுதி கரை முழுவதுமாக பலப்படுத்தவில்லை. எனவே தென் பகுதியில் உள்ள கரையை பலப்படுத்த வேண்டும் என கண்டக்காடு கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு மனு கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் பொதுப்பணித்துறை தென்கரையை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலுார் ஆல்பேட்டை முதல் தாழங்குடா வரையுள்ள பெண்ணையாற்றின் மையப்பகுதியில் உள்ள மணல் மேட்டை அகற்றவும், தென்கரையை பலப்படுத்தவும் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கியவுடன் பணிகள் துவக்கப்பட உள்ளன.