/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சவுந்தரேஸ்வரருக்கு ருத்ராட்ச பந்தல் உற்சவம்
/
சவுந்தரேஸ்வரருக்கு ருத்ராட்ச பந்தல் உற்சவம்
ADDED : மே 05, 2025 06:11 AM

பெண்ணாடம்; பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் சவுந்தரேஸ்வரருக்கு சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, ருத்ராட்ச பந்தல் அமைக்கும் உற்சவம் நடந்தது.
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் சவுந்தரேஸ்வரருக்கு சித்திரை தேர் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா உற்சவம் நடக்கிறது.
நேற்று காலை 11:00 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மலைக்கோவில் சவுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட ருத்ராட்ச பந்தல் அமைக்கும் உற்சவம் நடந்தது. 11:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இன்று (5ம்தேதி) அப்பருக்கு சூலப, இடப முத்திரையிடுதல், வரும் 7ம் தேதி சமணரை கழுவிலேற்றல், பிச்சாண்டவர் உற்சவம், முக்கிய நிகழ்வாக வரும் 9ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல், 10ம் தேதி தீர்த்தவாரி, 11ம் தேதி கொடியிறக்கம், 12ம் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது.