ADDED : ஏப் 30, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் ஒன்றியம், மாநிலத்தில் அதிக ஊராட்சிகளை உள்ளடக்கிய பெரிய ஒன்றியமாக உள்ளது. இங்கு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், கலைஞர் கனவு இல்லம், கான்கிரீட் வீடுகள் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில், ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் ஆளும் கட்சியினர் பிரமுகர்கள் தலையிட்டு கமிஷன் பெறுகின்றனர். வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் பயனாளிகளிடம் ரூ. 10 ஆயிரம் கமிஷன் செய்கின்றனர். இதற்கு, அரசு அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

