
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 11வது மாவட்ட மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினா். துணைத் தலைவர் சீத்தாபதி முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் செல்வபாலன் வரவேற்றார். அரசு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி வேலை அறிக்கையையும், பொருளாளர் ரவிச்சந்திரன் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர்.
மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்களையும், டேங்க் ஆபரேட்டர்களையும் நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

