/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊரக வளர்ச்சி துறை மேம்பாட்டு பணி; அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வுக் கூட்டம்
/
ஊரக வளர்ச்சி துறை மேம்பாட்டு பணி; அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வுக் கூட்டம்
ஊரக வளர்ச்சி துறை மேம்பாட்டு பணி; அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வுக் கூட்டம்
ஊரக வளர்ச்சி துறை மேம்பாட்டு பணி; அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வுக் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2025 10:58 PM
கடலுார்; கடலுார் மாவட்ட கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
நகர்ப்புறங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளையும் கிராமங்களில் ஏற்படுத்திடும் வகையிலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்த துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழு மானியம், துாய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை தொடர்ச்சியான முறையில் சுத்தம் செய்யவும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தினார்.
மழைக்காலம் துவங்கும் முன் கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல்ஆட்சியர் பிரியங்கா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) வரதராஜபெருமாள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.