/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் போராட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் போராட்டம்
ADDED : அக் 31, 2025 02:22 AM

கடலுார்:  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலுார் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை செயலாளர் வே லவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கருணாமூர்த்தி, கண்ணன், மாவட்ட செயலாளர்கள் திருவேங்கடம், ராதா, பொதுக்குழு உறுப்பினர் சீத்தாராமன், செயற்குழு ரங்கசாமி மு ன்னிலை வகித்தனர்.
துாய்மைக்காவலர்களின் ஊதியத்தை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி, ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு ம்.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில்கொண்டு வட்டார, மாவட்ட அளவில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

